சீனாவில் கொரோனாவின் தீவிரம் குறைந்த நிலையில், மீண்டும் வைரஸ் தாக்‍குதல் - 78 பேருக்‍கு வைரஸ் தொற்று இருப்பதாக அதிர்ச்சித் தகவல்

Mar 24 2020 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தாக்‍கம் குறைந்து வந்த நிலையில், மீண்டும் 78 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில நாட்களாக அந்த வைரசின் தாக்கம் தணிந்து இருந்தது. குறிப்பாக கொரோனா கண்டறிப்பட்ட வூகான் நகரில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை. இந்நிலையில், அந்நாட்டில் புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த ஏழு மரணமும் ஹூபே மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. இதில் 74 பேர் வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு திரும்பியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 3 ஆயிரத்து 277-ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 171 ஆக உயர்ந்து உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 ஆயிரத்து 159 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். சீனாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 90 சதவீதம்பேர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00