Hubei மாகாணத்தில் ஊரடங்கு தளர்வு : வெளியேறும் மக்களை வரவிடாமல் தடுப்பதால் வன்முறை

Mar 29 2020 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக நாடுகளை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் தோன்றிய Hubei மாகாணத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், அங்கிருந்து வெளியேறும் மக்களை வரவிடாமல் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்‍கள் தடுப்பதால் வன்முறை வெடித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தோன்றிய Hubei மாகாணத்தில் தற்போது, வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால், கடந்த இரண்டு மாதங்களாக அங்கு அமலில் இருந்து வந்த ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. அங்கு சிக்கிக் கொண்டவர்கள் தங்களுடைய ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முற்படுகின்றனர். இதனால், பேருந்துகளும், ரயில்களும் நிரம்பி வழிகின்றன. ஆனால், அவர்கள், தங்களுடைய ஊர்களுக்கு திரும்ப விடாமல் மற்றவர்கள் தடுப்பதால், வன்முறை வெடித்துள்ளது. Hubei மாகாணத்தையும், Jiangxi மாகாணத்தையும் இணைக்கும் பாலத்தின் மீது, இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். அமைதிப்படுத்த முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு, அவர்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. Hubei மாகாணத்தில் இருந்து வருபவர்களால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே, மற்ற மாகாண மக்கள், அவர்களை தடுக்க முற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00