பிரிட்டனில் உயிரிழப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வருமா? : தேசிய மருத்துவ இயக்குனரின் புதிய தகவல்

Mar 29 2020 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கையை 20 ஆயிரத்திற்குள் கட்டுப்படுத்தி விட்டால், அரசு சிறப்பாக செயல்பட்டதாக கருதலாம் என அந்நாட்டு தேசிய மருத்துவ இயக்‍குநர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்‍குதலுக்‍கு, ஐரோப்பா நாடான பிரிட்டனில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் தேசிய சுகாதார சேவையின் தேசிய மருத்துவ இயக்‍குநர் பேராசிரியர் Stephen Powis, அரசின் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கை குறித்து பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கையை 20 ஆயிரத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் என்றால், அதனை வெற்றிகரமான நடவடிக்‍கையாக கருத முடியும் என குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புகளை 20 ஆயிரத்திற்குள் கட்டுப்படுத்தினால், உலக அளவில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டிருக்‍கிறோம் என அர்த்தம் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு மரணமும் துயரம் என்றபோதிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கையை கட்டுப்படுத்தினால் அது சிறந்த முயற்சியாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதுகுறித்து பிரிட்டன் அலட்சியமாக இருக்‍கக்‍கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00