உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 75 ஆயிரத்தை தாண்டியது - 13 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்தது

Apr 7 2020 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகம் முழுவதும் 13 லட்சத்து 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது.

கொரோனா வைரசால், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளி‌ட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 13 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 75 ஆயிரத்து 762-ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து ​வீடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 650 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 10 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில், 1 லட்சத்து 36 ஆயிரத்து 675 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 ஆயிரத்து 341 பேர் மரணமடைந்துள்ளனர்.

இத்தாலியில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 547 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 16 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் 51 ஆயிரத்து 608 பேர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், 5 ஆயிரத்து 373 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியில் ஆயிரத்து 810 பேரும், பிரான்சில் 8 ஆயிரத்து 911 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில், 3 ஆயிரத்து 331 பேரும், ஈரானில் 3 ஆயிரத்து 739 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00