அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்‍கு ஆயிரத்து 966 பேர் பலி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியதால் திணறும் அமெரிக்கா

Apr 8 2020 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பால், ஆயிரத்து 966 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 33 ஆயிரத்து 319 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால், அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவின் பிடியில், அமெரிக்கா சிக்கித் தவித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், அமெரிக்கா திணறி வருகிறது. சர்வதேச அளவில், கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில்,​நேற்று ஒ‍‍ரே நாளில், புதிதாக 33 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ‍செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 323 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, நியூயார்க் மாநிலத்தில், 1 லட்சத்து 42 ஆயிரத்து 384 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு மட்டும் 5 ஆயிரத்து 489 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு ஆயிரத்து 966 பேர் உயிரிழந்துள்ள‌தை அடுத்து, பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00