உலகம் முழுவதும் படுமோசமாக வீழ்ச்சி அடைந்து வரும் பொருளாதார நிலை - 170 நாடுகளில் தனிநபர் வருமானம் குறையும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

Apr 10 2020 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா அச்சுறுத்தலால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகம் மோசமான பொருளாதார நிலையை சந்தித்து வருவதாகவும், 170 நாடுகளில் தனிநபர் வருமானம் குறையும் என்றும் ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டுக்‍கூட்டம் வாஷிங்டனில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் கிரிஸ்டலினா, கொரோனா வைரஸ், சமூக மற்றும் பொருளாதார நிலையை மின்னல் வேகத்தில் சீர்குலைத்து விட்டதாக கூறினார். இந்த அளவுக்‍கு மோசமான நிலையை உலகம் கண்டதில்லை என்றும், 170 நாடுகளில் தனிநபர் வருமானம் குறையும் என்றும் எச்சரித்தார். நியூயார்க் பங்குச்சந்தை சீர்குலைந்து, கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். தற்போதைய மோசமான நிலையில் இருந்து மீள, வளரும் நாடுகளுக்கு பல லட்சம் கோடி நிதி தேவைப்படும் என்றும், இதில் ஒரு பகுதியை மட்டுமே அவர்களால் திரட்ட முடியும் என்றும், மீதி தொகைக்‍கு அவர்களுக்கு அவசர உதவி தேவைப்படும் என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00