கொரோனா நெருக்‍கடியை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்‍குதல் நடத்த வாய்ப்பு - உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

Apr 10 2020 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசின் தாக்கத்தால் பயங்கரவாதம், சமூக அமைதியின்மை உள்ளிட்ட 8 விதமான பிரச்சனைகள் தலை தூக்கும் என ஐ.நா. சபை உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்காத ஐக்கிய நாடுகள் சபை, முதன்முறையாக இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கங்கள், மருத்துவ நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புகளின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐநா தலைமைச் செயலாளர் அந்தோனியோ கட்டெரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையை கொரோனா முதலில் அழித்துவிடும் எனவும், நோயை அரசுகள் சரியாகக் கையாளவில்லை என குடிமக்கள் நினைத்தார்களேயானால், மக்களின் நம்பிக்கையில் சரிவு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி வளர்ச்சி குன்றிய நாடுகளிலும், வளரும் நிலைக்கு மாறும் நிலையில் உள்ள நாடுகளிலும் பதற்ற நிலையை உருவாக்கும் - தேர்தல்களை தள்ளி வைப்பது, அல்லது வாக்களிப்பை நடத்த முடிவு செய்வது ஆகியவை இந்தக் காலக்கட்டத்தில் அரசியல் பதற்றங்களை உருவாக்கும்;

சமூக, பொருளாதார, சுகாதாரச் சூழல்களில் கொரோனா ஏற்படுத்தும் நிச்சயமின்மை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வன்முறை ஏற்படும் - இதனால், வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள் பலவீனமாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனாவை தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், இதனை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், கொரோனாவுக்கு எதிரான மருந்து தயாரிப்பில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால், உலகம் முழுவதும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடுகளுக்கிடையே இருந்த பிரச்சனைகள், அமைதிப்பேச்சுவார்த்தைகள் தடை பட்டுள்ளன. பிற நாடுகளுக்கு பயணம் செய்வது தடை பட்டுள்ளதால் பல நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியாத சூழலை கொரோனா ஏற்படுத்தியுள்ளது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

சமூக விரோதம், வெறுப்பு பேச்சுகள் ஆகியவை அதிகரிப்பதோடு, அகதிகள் பாரபட்சத்துடன் நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது, ஊடகங்களை முடக்குவது, குடிமையுரிமை, பேச்சுரிமை, கருத்துரிமையும் பாதிக்கப்பட்டு, எதேச்சாதிகாரம் அதிகரிக்கும் என 8 பேராபயங்களை ஐநா தெளிவுறுத்தியுள்ளது.

"இது ஒரு தலைமுறையின் போராட்டம், எனவும், ஐ.நா சபை தொடங்கியதிலிருந்து முதன்முதலாக இப்போதுதான் இது போன்ற சோதனையை சந்திக்கிறது எனவும், கட்டெரெஸ் உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00