கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தும் : அமெரிக்க அதிபருக்கு எதிராக சீன ஊடகங்கள் கருத்து

Apr 10 2020 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக சுகாதார அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் விமர்சனங்கள், உலகளாவிய கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தும் என சீன ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது சீனா அதை ரகசியமாக வைத்திருந்ததாக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பையும் விட்டுவைக்கவில்லை. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருவதாகவும், ஆரம்பகட்டத்தில் மெத்தனப் போக்குடன் இருந்ததே இந்த அளவுக்கு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார். ஆனால், டொனால்ட் ட்ரம்பின் இந்த போக்கு உலகளாவிய கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தும் என சீன ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. ஜனவரி 30ம் தேதியே, உலகளாவிய கொரோனா வைரஸ் ஆபத்தை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு எச்சரித்ததாகவும், இந்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது தோல்வியை மறைக்கவே தற்போது இது போன்ற விமர்சனங்களை டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்து வருவதாகவும் சீன ஊடகங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00