கடல் புழுக்களின் ரத்தம் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை : பிரான்ஸ் மருத்துவர்களின் ஆராய்ச்சி திடீர் நிறுத்தம்

Apr 10 2020 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடல் புழுக்களின் ரத்தத்தின் மூலம் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை குணப்படுத்த முடியுமா என பிரான்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனைகள் அறிவித்துள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரீசிலுள்ள 2 மருத்துவமனைகள், கடல் புழுக்களின் ரத்தத்தைக் கொண்டு, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியுமெனா என ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தன. கடல் புழுக்களின் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின்கள் மனிதனின் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களை விட 40 மடங்கு அதிக அளவு ஆக்சிஜனை உள்ளதாகவும், இதனால் வெண்டிலேட்டர்களின் பயன்பாடு குறையும் எனக்கூறப்பட்டது. பாரீசிலுள்ள இரு மருத்துவமனைகள் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டன. தாமாக முன்வந்த 10 கொரோனா தொற்றுள்ள 10 நோயாளிகளிடம் இதனை சோதனை செய்து பார்க்க முடிவு செய்யப்பட்டது. இதனிடையே இந்த ஆராய்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக, மருத்துவமனை நிர்வாகங்கள் திடீரென அறிவித்துள்ளன. இதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சோதனையை எந்த நோயாளிக்கும் பரிசோதித்து பார்க்கவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00