கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி - 9 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முடிவு

May 21 2020 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த Rolls-Royce நிறுவனம் Boeing 787, Airbus A350 போன்ற விமானங்களுக்கு இயந்திரங்களை விநியோகித்து வருகிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் விமான போக்குவரத்தை நம்பியே உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 52 ஆயிரம் ஊழியர்களில் குறைந்தது 9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவால் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் 12, ஆயிரத்து 111 கோடி ரூபாய்க்கு மேல் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00