கொரோனா பரவலின் அபாயம் - உலகளவில், 6 கோடி பேர் கடும் வறுமையில் தள்ளப்படுவர் என உலக வங்கி எச்சரிக்கை

May 21 2020 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பரவலின் விளைவால், உலகளவில் 6 கோடி பேர் கடும் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கித் தலைவர் David Malpass தெரிவித்தபோது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகளவில், 6 கோடிக்கும் அதிகமானோர் கடும் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், இது, வறுமையை ஒழிக்கும் போராட்டத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். கொரோனா தடுப்பு, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, 100 வளரும் நாடுகளுக்கு அடுத்த 15 மாதங்களில் 12 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மொத்த நிதி உதவியில் மூன்றில் ஒரு பங்கு, உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஃப்கானிஸ்தான், ஹைதி, நைஜர் உள்ளிட்ட நாடுகளுக்கு தரப்படும் என்றும், வளரும் நாடுகள் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் உலக வங்கியின் முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, ஏழைகளுக்கு ரொக்க உதவி, போதிய சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவது, தனியார் துறையை பாதிப்பில் இருந்து காப்பது, பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது உள்ளிட்டவற்றுக்கும் உலக வங்கி முக்கியத்துவம் அளிக்‍கும் என்றும் டேவிட் மால்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00