கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தால், இறப்பு விகிதிம் அதிகரிக்கும் - அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை
May 23 2020 10:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தால், இறப்பு விகிதிம் அதிகரிக்கும் என்று, அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள அமெரிக்காவில், கொரோனா நோயாளிகளுக்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு வழங்கப்படும் இந்திய தயாரிப்பான ஹைட்ராக்சி க்ளோரோகுவின் என்ற மருந்து வழங்கப்படுகிறது. கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் தருவதாக கூறப்பட்டதால், இந்தியாவுக்கு கடுமையாக அழுத்தம் கொடுத்து அந்த மருந்தை அமெரிக்கா வாங்கியது. ஹைட்ராக்சி க்ளோரோகுவின் மருந்தை, தான் எடுத்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப்பும் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மருந்து, பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா எதிர்ப்பு மருந்து தந்தால் இறப்பு விகிதிம் அதிகரிக்கும் என்று, அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.