சமூக வலைதளங்களின் உரிமைகளுக்குக் கட்டுப்பாடு : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிய நிர்வாக உத்தரவு

May 29 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
சமூக வலைதளப் பதிவுகளின் மீதான முடிவுகளை, சம்பந்தப்பட்ட வலைதள நிறுவனங்கள் எடுப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில் நிர்வாக உத்தரவு ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குச்சாவடிக்குச் செல்லாமலேயே வாக்களிக்க ஏதுவாக பல்வேறு மாநிலங்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதன் ஒருபகுதியாக மின் அஞ்சல் மூலம் வாக்குச் சீட்டை அனுப்புவது குறித்தும் சில மாநிலங்கள் பரிசீலித்துவருகின்றன. ஆனால், இப்படி வாக்குச் சீட்டை மின் அஞ்சல் மூலம் அனுப்பினால், அது ஏமாற்றுக்காரர்களுக்கு சவுகரியமாக அமைந்துவிடும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு குறித்து சந்தேகம் தெரிவித்த ட்விட்டர், இதுகுறித்த உண்மைகளைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு தமது பதிவர்களைக் கேட்டுக்கொண்டது. ட்ரம்ப்பின் பதிவுக்குக் கீழே நீல வண்ணத்தில் இதற்கான வேண்டுகோள் வைக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒருவரின் சமூக வலைதளப் பதிவு குறித்து சந்தேகம் எழுப்புவது இதுவே முதல் முறை என்ற நிலையில், சமூக வலைதள நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க ட்ரம்ப் முடிவெடுத்தார். இதனடிப்படையில் நிர்வாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ள ட்ரம்ப், பதிவர்களின் பதிவுகள் குறித்து விமர்சனம் செய்ய, அல்லது அவற்றைத் தடை செய்ய சமூக வலைதளங்களுக்கான உரிமையை ரத்துசெய்யும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00