அமெரிக்காவில் கருப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கண்‌டனம் - இன சமத்துவத்திற்கு ஆதரவாக இருப்பதாக கருத்து

Jun 2 2020 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், "இன சமத்துவத்திற்கு" கூகுள் நிறுவனம் ஆதரவாக நிற்குமென அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி திரு.சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில், கடந்த 25-ம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டித்தும், இனவெறி தாக்குதல்களை தடுக்க வலியுறுத்தியும், அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனம் எப்போதும் "இன சமத்துவத்திற்கு" ஆதரவாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், கூகுள் மற்றும் யூ டியூபின் முதன்மை பக்கத்தில், "இன சமத்திற்கு குரல் கொடுப்போம்" என்ற வாசகம் இடம்பெறும் எனத் தெரிவித்த கூகுள் பிச்சை, அதன் "Screen shot"-ஐயும் பகிர்ந்திருந்தார். ஜார்ஜ் ஃப்ளாய்டு, ப்ரியோனா டெய்லர், அகமது அர்பெரி போன்ற குரலில்லாத பலருக்கும், இனவெறியால் பாதிக்கப்பட்டு துயரத்தை உணர்ந்த அனைவருக்கும் "நீங்கள் தனியாக இல்லை" என கூறிக்கொள்வதாகவும், சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00