சர்வதேச அளவில் ஒரு கோடிக்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பாதிப்பு - உயிரிழப்பு 5 லட்சத்தை கடந்தது

Jun 28 2020 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

சீனாவில் கண்டுபிடிக்‍கப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 210-க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 25 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், பலி உயர்வு ஒரு லட்சத்து 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அடுத்தப்படியாக பிரசில் நாட்டில் 12 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்‍கப்பட்டுள்ளதோடு, உயிரிழப்பும் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ரஷ்யாவில் 6 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கும், இங்கிலாந்தில் 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஸ்பெயின், இத்தாலி, சிலி, ஈரான், மெக்‍ஸிகோ உள்ளிட்ட நாடுகளும் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிய நிலையில், உயிரிழப்பும் 5 லட்சத்தை தாண்டியுள்ளது. 54 லட்சத்துக்‍கும் அதிகமானோர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00