சீனாவில் தென்மேற்கு பகுதியில் இடைவிடாது பெய்த கனமழை : நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் சிக்கிய பொதுமக்கள்

Jun 28 2020 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்மேற்கு சீனாவில் பலத்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கடந்த மூன்று நாட்களாக, நாட்டின் தென்பகுதியில் பலத்த மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் சிச்சுவான் மாகாணத்தின் வென்ச்சுவான் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே, பல்வேறு ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல குடியிருப்புப் பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. மான்னிங் நகருக்கு அருகே வசித்துவந்த ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ள ஆபத்தில் சிக்கியதால், அவர்களையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்தனர். இரவு நேரங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்ததாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். இதே போல் ச்சான்கின் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால், தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களை மழை நீர் சூழ்ந்தது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் படையினர் அனுப்பப்பட்டு, நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00