ஈரான் ராணுவ படைத்தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரம் - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது ஈரான்

Jun 30 2020 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரான் ராணுவ படைத்தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக ஈரான் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்த பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் ஈரான் ராணுவ படைத்தளபதி குவாசிம் சுலைமானி ஈராக் சென்றிருந்த போது, அமெரிக்கப் படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது ஈரான் மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஈரானின் முக்கிய நபரான குவாசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஈரான் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் தப்பிவிடாமல் இருக்க இண்டர்போலின் உதவியை ஈரான் நாடியுள்ளதாக, உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதில் ட்ரம்ப் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் மீது ஈரான் புகார் தெரிவித்துள்ளதாக தெஹ்ரான் வழக்கறிஞர் அலி அல்காசிமெர் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் இண்டர்போல் உதவியை ஈரான் நாடியுள்ளதாக கூறப்படும் நிலையில், அதிபர் ட்ரம்புக்கு எதிராக சிகப்பு நோட்டீஸ் பிறப்பிக்க அந்நாடு வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00