ஈக்விடாரில் கொரோனாவால் உயிரிழந்த தங்கள் தலைவரின் உடலை திருப்பித்தராததால் அமேசான் பழங்குடியின மக்கள் கோபம் - ராணுவ வீரர்களை கடத்தியதால் பரபரப்பு

Jul 6 2020 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈக்விடார் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த தங்கள் தலைவரின் உடலை திருப்பித்தரக்கோரி, அமேசான் பழங்குடியினர் ராணுவ வீரர்களை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈக்வடார் நாட்டின் குமே என்ற பகுதியில் வசித்து வரும் அமேசான் பழங்குடியின மக்களின், தலைவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். பழங்குடியின பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்வதற்காக, தலைவரின் உடலை தங்களிடமே ஒப்படைக்கும்படி, பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த நபரை கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளுடன் சேர்த்து அடக்கம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள், 2 ராணுவ வீரர்கள், 2 காவல்துறையினர், 2 பொதுமக்கள் என 6 பேரை பிணைக்கைதிகளாக கடத்தி சென்றனர்.

அவர்களை விடுதலை செய்யக்கோரி பழங்குடியின மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது தலைவரின் உடலை தந்தால் மட்டுமே பிணைக்கைதிகளை விடுதலை செய்வோம் என பழங்குடியின மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள், புதைக்கப்பட்ட பழங்குடியின தலைவரின் உடலை தோண்டி எடுத்து அம்மக்களிடம் ஒப்படைத்தனர். தலைவரின் உடலை பெற்றுக்கொண்ட பழங்குடிகள், பிணைக்கைதிகளை விடுதலை செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00