கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்தது - டொனால்ட் ட்ரம்ப் கருத்து

Jul 31 2020 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்தது என டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாக்காளர்கள் வாக்குச் சாவசடிக்குச் சென்று வாக்களிப்பதில் பெரிய அளவில் பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது. இதனால், அஞ்சல் மற்றும் மின் அஞ்சல் மூலம் வாக்களிக்கும் முறைகளைப் பின்பற்ற பல மாநிலங்கள் முடிவெடுத்துள்ளன. ஆனால் இந்த முறையைப் பயன்படுத்தி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்றும், அதனால் இந்த முறையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். ஆனால், அது போன்ற ஆபத்துக்கள் இல்லை என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் நிலை ஏற்படும் வரை அதிபர் தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்த முடிவு என ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலை தள்ளிவைக்க அவருக்கு அதிபர் என்ற முறையில் அதிகாரம் இல்லை என்றும் செனட் மற்றும் பிரதிநிதிகளின் அவை ஒப்புதல் இல்லாமல், தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00