அதிகரிக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகள் : ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட தடை

Aug 2 2020 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்றிலிருந்து கொரோனா பேரிடர் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்ததால் ஏற்கெனவே மாநிலம் முழுவதும் ஆறு வார காலம் பொது ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டிலேயே இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட மெல்போர்ன் நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், வரும் நாட்கள் பேரிடர் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து தினமும் இரவு எட்டு மணி முதல் காலை ஐந்து மணிவரை கடுமையான ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பணிகளைத் தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என பொதுமக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00