லெபனான் வெடி விப‌த்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர் ராஜினாமா - கூண்டோடு அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர்

Aug 11 2020 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
லெபனான் நாட்டில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர் ஹசன் டெய்ப் ராஜினாமா செய்தார்.

மேற்காசிய நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில், 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2 ஆயிரத்து 750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் வே‌திப்பொருள், கடந்த 4-ம் தேதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில், 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்தனர்.

வெடி விபத்திற்கு லெபனான் அரசின் அலட்சியம் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், உடனடியாக அரசு பதவி விலக வேண்டும் என்று பெய்ரூட் நகர் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.​வெடி விபத்து சம்பவத்‌தையடுத்து, லெபனான் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் ஹசன் டெய்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது அமைச்சரவையும் கூண்டோடு பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00