ஆக்‍ஸ்ஃபோர்டு பல்கலைக்‍கழகத்தின் கொரோனா தடுப்பூசி - 2வது மற்றும் 3-ம் கட்ட சோதனையை மேற்கொள்ள சீரம் நிறுவனத்திற்கு அனுமதி

Sep 16 2020 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆக்‍ஸ்ஃபோர்டு பல்கலைக்‍கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட சோதனையை மேற்கொள்ள சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசின் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், Astra Zeneca எனும் மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து, கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை உருவாக்கின. கோவிஷில்டு என்ற இந்த தடுப்பூசியின் முதல்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், 2-ம் கட்ட சோதனை கடந்த வாரம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தடுப்பூசி பரிசோதிக்‍கப்பட்ட 30 ஆயிரம் தன்னார்வலர்களில் ஒருவருக்கு மோசமான பக்கவிளைவுகள் ஏற்பட்டதால், தடுப்பூசி பரிசோதனை உலகம் முழுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், இந்த தடுப்பூசியை பெரிதும் நம்பியிருந்த இந்தியாவுக்‍கு ஏமாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், பக்‍கவிளைவுகள் ஏற்பட்டதாகக்‍ கூறப்பட்ட நபருக்‍கு வேறு சில பிரச்னைகள் இருந்ததாக இந்தியா மற்றும் இங்கிலாந்தின் தடுப்பூசி தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தடுப்பூசி விதிமுறைகளை பின்பற்றி இந்தியாவின் சீரம் நிறுவனம், கோவிஷில்டு தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்கலாம் என தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00