கண் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு : சீனா பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வில் கண்டுபிடிப்பு

Sep 18 2020 8:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
மூக்கு கண்ணாடி அணிவோருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் வாய்ப்பு குறைவு என்றும், தொற்றிலிருந்து அவர்களுக்‍கு பாதுகாப்பு கிடைக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட 276 கொரோனா நோயாளிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சீனாவின் நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்களும் அடங்குவர். இவர்கள் தங்களது ஆய்வு முடிவை ஜாமா கண் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வில், ஒருநாளைக்கு 8 மணிநேரத்திற்கும் மேலாக மூக்கு கண்ணாடி அணிபவர்களுக்‍கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்‍கு, கண் வழியாக வைரஸ் உடலினுள் புகும் வாய்ப்பு குறைகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், அதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00