ஈரான் மீது மீண்டும் ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் - அமெரிக்கா திட்டவட்டம்

Sep 18 2020 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா உறுதிபட தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசிய நாடான ஈரான், அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தி வந்தது. இதற்கு முடிவு கட்டும் வகையில், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக கூறி வந்த டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது தீரா பகையாக உருவாகியுள்ளது.

இதனிடையே கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா. விதித்த ஆயுத தடை அடுத்த மாதம் காலாவதியாகிறது. இந்த தடையை காலவரையின்றி நீட்டிக்க வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்‍க கொண்டு வந்த தீர்மானம் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐ.நா. சபை பொது கூட்டத்தில் ஈரான் மீதான ஐ.நா. பொருளாதாரத் தடைகள் நாளை அறிவிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ஈரான் மீது ஐ.நா. பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமல்படுத்துவதை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்‍கைகளையும் அமெரிக்‍கா செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும் எனவும் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00