அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சக்திவாய்ந்த 'Sally' புயல் - அமெரிக்காவின் அலபாமா மற்றும் புளோரிடா மாகாணங்களில் கடும் பாதிப்பு

Sep 18 2020 8:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
அட்லாண்டிக் பெருங்கடலில் தோன்றிய 'Sally' என்ற சக்தி வாய்ந்த புயல். அமெரிக்காவின் அலபாமா மற்றும் புளோரிடா மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் தோன்றிய 'Sally' என்ற சக்தி வாய்ந்த புயல் அமெரிக்காவின் அலபாமா மற்றும் புளோரிடா மாகாணங்களை நேற்று முன்தினம் தாக்கியது. மணிக்கு 165 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்று காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின்கம்பங்கள் சரிந்தன. வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயல் காரணமாக அலபாமா மற்றும் புளோரிடா மாகாணங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கடலில் நின்றுகொண்டிருந்த படகுகள் பல சாலைக்குத் தூக்கி வீசப்பட்டன. புயலைத் தொடர்ந்து 2 மாகாணங்களிலும் பேய் மழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அலபாமா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் அதிகமானோர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். புயல் தாக்கியதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அலபாமா மற்றும் புளோரிடா மாகாணங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00