கொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தகவல்

Sep 18 2020 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில், உலகளாவிய நம்பர் ஒன் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இது இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். கொரோனாவை வெல்வதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என தெரிவித்த அவர், பலர் தங்கள் நம்பிக்கையை ஒரு தடுப்பூசி மீது வைத்திருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த நெருக்கடியை ஒரு தடுப்பூசி மட்டும் போக்காது என அவர் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

மேலும், புதிய தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாடுகள் பெருமளவில் விரிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும், உயிர்களை காக்கவும் குறிப்பாக அடுத்த 12 மாதங்களுக்குள்ளாக முக்கிய சிகிச்சையை ஒன்றிணைந்து வழங்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று நமது வாழ்நாளில் கண்டிராத ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த ஆண்டு ஐ.நா. பொதுச்சபை கூட்டம் வழக்கமான முறையில் இருக்காது எனவும் ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00