கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டிப்போடும் பணக்கார நாடுகள் - தடுப்பூசி விற்பனைக்கு வரும் முன்பே மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் என அதிர்ச்சி தகவல்

Sep 18 2020 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் போட்டி போடுகின்றன. பாதிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்களை வாங்குவதற்கு அவை முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு விட்டன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு கடிவாளம் போடுவதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா, இஸ்ரேல் என பல நாடுகளும் தடுப்பூசியை உருவாக்கி, அவற்றை பல்வேறு கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பார்த்து சோதித்து வருகின்றன. இன்னும் சந்தைக்கு எந்தவொரு தடுப்பூசியும் பகிரங்க விற்பனைக்கு வரவில்லை.

இந்நிலையில், உலக மக்கள் தொகையில் 13 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள பணக்கார நாடுகள், ஏற்கனவே முன்னணியில் உள்ள 5 தடுப்பூசிகளின் பாதிக்கும் மேலான டோஸ்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாக ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கினர் அல்லது 61 சதவீதத்தினருக்கு 2022-ம் ஆண்டு வரை தடுப்பூசி கிடைக்காது என கூறியுள்ளது. அதே நேரத்தில் உலக மக்களில் பெரும்பாலோர் தடுப்பூசிக்கு தேவையானதை விட கூடுதல் காலம் காத்திருப்பார்கள் என்றும் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறுகிறது. எல்லோருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு உலக பொருளாதாரத்தில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே செலவாகும் எனவும் ஆக்ஸ்பாம் கணித்துள்ளது.

ஜி-20 நாடுகளின் சுகாதாரம் மற்றும் நிதி மந்திரிகள் கூடி கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பற்றி விவாதிக்க உள்ள நிலையில், பணக்‍கார நாடுகளின் கொரோனா தடுப்பூசி ஒப்பந்தம் தொடர்பான வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00