பிரான்ஸில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பாரிஸ் உள்ளிட்ட 15 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

Oct 15 2020 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதைத் தடுக்‍கும் வகையில் 15 நகரங்களில் இரவு நேர ஊரடங்கை பிரான்ஸ் அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவது உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 22 ஆயிரத்து 951 பேருக்‍கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாரீஸ் உள்ளிட்ட 15 நகரங்களில் 4 வாரகாலத்திற்கு இரவு நேர ஊரடங்கு நாளை மறுநாள் முதல் அமலுக்‍கு வருகிறது. இதை மேலும் 2 வாரங்களுக்‍கு நீட்டிக்‍கும் எண்ணமும் அந்நாட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. இது குறித்து தொலைக்‍காட்சியில் உரையாற்றிய அதிபர் மேக்‍ரான், நாடு முழுவதும் மீண்டும் ​பொதுமுடக்‍கத்தை அமல்படுத்துவது பொருந்தாத நடவடிக்‍கை என்றார். ஊரங்கு காலத்தின் போது இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை பொதுமக்‍கள் வீட்டை விட்டு வெளியில் வரத் தடை விதிக்‍கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய காரணங்களுக்‍காக வெளியில் வரும் பொதுமக்‍களுக்‍கு அனுமதியளிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00