அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு இந்திய வம்சாவளியினர் 70 சதவிகிதம் பேர் ஆதரவு - கருத்துக்கணிப்பில் தகவல்

Oct 15 2020 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடனுக்கு 70 சதவிகிதம் இந்திய அமெரிக்கர்கள் ஆதரவு அளிக்கும் மனநிலையில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், I.A.A.S எனப்படும் அமைப்பு இந்திய - அமெரிக்கர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பிடனுக்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். 22 சதவீதம் பேர் மட்டுமே டிரம்பிற்கு வாக்களிப்போம் என கூறியுள்ளனர். பொருளாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை தந்து வாக்களிப்போம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால். இந்திய அமெரிக்க உறவு வலுப்பெறும் என்றும் கருதுகின்றனர். ஜனநாயகக் கட்சி துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸை தேர்ந்தெடுத்து இருப்பதும் பிடனுக்கு ஆதரவு பெருகியதற்கான காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஜனநாயக கட்சிக்கு ஆதரவு இருந்தாலும், முஸ்லிம்களின் ஆதரவு முழுமையாக பிடனுக்கு உள்ளது. 67 சதவீத இந்துக்களும், 82 சதவீத முஸ்லிம்களும் பிடனை ஆதரிக்கின்றனர். கிறிஸ்தவர்களில் கணிசமானவர்கள் டிரம்பை ஆதரிக்கின்றனர் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00