கொரோனா வைரசுக்கான 2-வது தடுப்பூசி தயார் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிரடி அறிவிப்பு

Oct 15 2020 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசுக்கு எதிராக 3-வது தடுப்பூசியையும் கூடிய விரைவில் உருவாக்கிவிடுவோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து விட்டதாக ரஷியா அதிபர் புதின் அதிரடியாக அறிவித்தார். 'ஸ்புட்னிக் 5' என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி, தற்போது ரஷியாவில் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் இந்த 'ஸ்புட்னிக் 5' தடுப்பூசியை பரிசோதனை செய்துவருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக இரண்டாவது தடுப்பூசியையும் உருவாக்கிவிட்டதாக ரஷிய அதிபர் புதின் அதிரடியாக தெரிவித்துள்ளார். "எபிவேக்கொரோனா" என என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, சைபீரியாவில் உள்ள வெக்டர் இன்ஸ்டிடியூட் என்ற மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. செயின் பீட்டர்ஸ்பர்கை சேர்ந்த சுவ்மகோவ் நிறுவனத்தின் மேலும் ஒரு தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதானையில் உள்ளதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார். கூறிய விரைவில் கொரோனாவுக்கான 3-வது தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

'ஸ்புட்னிக் 5' தடுப்பூசியை தொடர்ந்து மேலும் ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கிவிட்டதாகவும் 3-வது தடுப்பூசியில் விரைவில் உருவாக்கிவிடுமோம் என ரஷியா அதிரடியாக தெரிவித்துள்ள நிகழ்வு உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00