இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்‍கத்திற்கு எதிராக இலங்கை அரசு மேல்முறையீடு

Oct 23 2020 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்தில், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியதற்கு எதிராக இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்து அரசு, கடந்த 2000-ம் ஆண்டில் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கம் சார்பில் இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த POAC அமைப்பு, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பின் அடிப்படையில் இங்கிலாந்து அரசு, அதிகாரப்பூர்வமாக விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியதற்கு எதிராக இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு மற்றும் அதன் பயங்கரவாத சித்தாந்தத்துடன் இணைந்த குழுக்கள் இன்னும் பல நாடுகளில் தீவிரமாக செயல்படுகின்றன என இலங்கை தெரிவித்துள்ளது. இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும் இலங்கை தனது மேல்முறையீடு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00