உலக அளவில் லஞ்சத்தில் இந்தியாவுக்கு 77-வது இடம் : அமெரிக்க லஞ்ச ஒழிப்பு அமைப்பு தகவல்

Nov 20 2020 9:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக அளவில் லஞ்சத்தில் இந்தியா 77-வது இடத்தில் உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த TRACE bribery risk matrix என்ற லஞ்ச ஒழிப்பு அமைப்பு, உலகளவில் 194 நாடுகளில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தை மதிப்பீடு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசுடன் தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கத்துறை, அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் சமூக மேற்பார்வை திறன் ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 48 புள்ளிகளுடன் 78-வது இடத்தில் இந்தியா இருந்தது.

வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தெற்குசூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகியவை தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ளன. லஞ்சம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் டென்மார்க், நார்வே, சுவீடன் மற்றும் நியூசிலாந்து ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00