கொரோனாவை முன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட் வாட்ச் : அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிப்பு

Nov 20 2020 7:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்று ஏற்படுவதற்கு 9 நாட்களுக்கு முன் வரை, ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மூலம், உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய முடியுமென அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Stanford School of medicine சார்பில், சுமார் 5 ஆயிரத்து 300 பேரில், கொரோனா தொற்று உள்ள 32 பேர் கண்டறியப்பட்டு, அவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் Nature Biomedical Engineering என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஆய்வில் பங்கேற்ற 32 பேரில் 81 சதவீதம் பேருக்கு, அதாவது 26 பேருக்கு இதயத்துடிப்பு, தூங்கும் நேரம் உள்ளிட்டவற்றில் மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 26 பேருக்கும், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே உடலில் மாற்றங்கள் நிகழத் தொடங்கியதாகவும், 4 பேருக்கு 9 நாட்களுக்கு முன்னதாகவே உடலில் மாற்றங்கள் நிகழ்ந்ததாகவும், ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றை கண்டறிய, நோயாளியின் மூக்கு மற்று தொண்டையில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளையே, ஆய்வாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பரிசோதனையில், தொற்றின் ஆரம்ப நிலையில் எடுக்கப்படும் மாதிரிகளில், நோய்த்தொற்றை கண்டறிய முடியாத சூழல் உள்ளது. ஆனால் தொற்று ஏற்படுவதற்கு 9 நாட்களுக்கு முன்னரே, இதயத்துடிப்பு உள்ளிட்ட காரணிகளில் மாற்றம் நிகழும் என்பதால், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அணிந்து, இதயத்துடிப்பை கண்காணிப்பதன் மூலம் கொரோனா தொற்றை சுலபமாக கண்டறியலாம் எனவும், அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00