கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டிசிவர் நீக்‍கம் - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

Nov 21 2020 1:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டிசிவர் மருந்தை உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளில் ஒன்றாக ரெம்டிசிவர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மருந்தை உலகம் முழுவதும் 50-க்கும் அதிகமான நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. டொனால்டு ட்ரம்ப் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது இந்த மருந்தை பயன்படுத்தியதாகக்‍ கூறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டிசிவர் மருந்தை உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது. ரெம்டிசிவர் மருந்தால் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்கள், பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் என எந்த தரப்பு நோயாளிகளும் பயன் அடையவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், எனவே இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00