அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் : துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் அறிவிப்பு

Nov 22 2020 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் என அந்நாட்டுத் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1 கோடியே 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 73 புள்ளி 16 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர், 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரிப்புக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் தான் காரணம் என தற்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு டிரம்ப் ஒத்துழைக்காமல் இருந்தால் அமெரிக்கா இன்னும் பல உயிர் இழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கொரோனாவை கட்டுப்படுத்த ஜோ பைடன் குழு ஒன்றை அமைத்துள்ளார். இதன் சார்பாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இணைந்து பைடன் - ஹாரிஸ் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து அமெரிக்கருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் என கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு அமெரிக்க மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00