பிரேசில் நாட்டில் பேருந்தும், ட்ரக் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து : 40க்கும் மேற்பட்டோர் பலி
Nov 26 2020 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரேசில் நாட்டில் பேருந்தும், ட்ரக் வண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பிரேசில் நாட்டின் Tagua நகருக்கு அருகே இந்த விபத்து நேரிட்டுள்ளது. அதிவேகமாகச் சென்ற ட்ரக் வண்டியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 37 பேர் உயிரிழந்தனர், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மூன்று பேர் உயிரிழந்ததாக போலீசார் அறிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், எனவே உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.