3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டுவிட்டரில் "ப்ளூ டிக்" வசதியை கொண்டுவர டுவிட்டர் நிறுவனம் முடிவு
Nov 26 2020 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை இந்தியா உட்பட உலகம் முழுக்க உள்ள மக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். டுவிட்டரில் "ப்ளூ டிக்" எனப்படும் "சரிபார்க்கப்பட்ட கணக்கு" ஒரு கவுரவ விசயமாக பார்க்கப்படுகிறது. இந்த "ப்ளூ டிக்" வசதி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகத்தினர், எழுத்தாளர்கள் போன்றோருக்கு வழங்கப்பட்டு வந்தது. இதனால் இதில் பல சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் "ப்ளூ டிக்" வசதியை கொண்டுவர டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இது மீண்டும் கொண்டு வரப்படும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.