இலங்கையில் குப்பை கிடங்காக மாற்றப்பட்ட யானைகள் நடைபாதை - மலைபோல் குவிந்துள்ள குப்பையில் உணவைத் தேடும் யானைகள்
Nov 26 2020 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையின் அம்பாரா பகுதியில் உள்ள குப்பை கிடங்கில், ஏராளமான யானைகள், உணவைத் தேடி அலையும் காட்சி, காண்போரை கலங்க வைத்துள்ளது.
அம்பாராவில் யானைகள் நடைபாதையாக இருந்த பகுதி, 10 ஆண்டுகளுக்கு முன் குப்பை கிடங்காக மாற்றப்பட்டது. யானைகள் உள்ளே நுழைவதை தவிர்க்க மின் வேலிகள் அமைக்கப்பட்டும், யானைகள் உணவைத் தேடி குப்பை கிடங்கிற்கு வருகின்றன. குப்பைக் குவியல்களில் காய்கறிக்கழிவுகளைத் தேடி உண்ணும் யானைகள், அவற்றோடு சேர்த்து பிளாஸ்டிக் கழிவுகளையும் உட்கொள்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் இப்பகுதியில் உடல்நலக்குறைவால், 361 யானைகள் உயிரிழந்துள்ளன. பசியோடு குப்பைக் குவியல்களில் உணவைத் தேடும் யானைகள், போதிய உணவு கிடைக்காவிடில் ஆவேசமடைந்து, கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மலைபோல் குவிந்துள்ள குப்பையில், 40-ற்கும் மேற்பட்ட யானைகள், உணவு தேடி அலையும் காட்சி வெளியாகியுள்ளது.