அமெரிக்காவில் கொரோனா தினசரி பாதிப்பில் புதிய உச்சம் - கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி
Nov 26 2020 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 15-வது நாளாக ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அமெரிக்காவில் ஒரு கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 304 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்து 661-ஆக அதிகரித்துள்ளது.