ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்திலிருந்து வந்த பொதுமக்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற டாஸ்மானியா மக்கள்
Nov 27 2020 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த ஜுலை மாதத்திற்குப் பின் முதன் முதலாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலிருந்து வந்த பொதுமக்களை டாஸ்மானியா மாநிலத்தவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் ஆஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கு இடையே பொதுமக்கள் பயணம் செய்ய கடந்த ஜுலை மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விக்டோரியா மாநிலத்திலிருந்து நியூசவுத்வேல்ஸ் மாநிலத்திற்குச் செல்லும் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதே போல் தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மானியா போன்ற மாநிலத்திற்குச் செல்பவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, வழக்கமான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுவருகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜுலை மாதத்திற்குப் பின் முதன் முறையாக விக்டோரியாவிலிருந்து டாஸ்மானியா வந்த குடும்பத்தினர், உறவினர்களை ஏராளமான பொதுமக்கள் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்.