கடலில் விழுந்த இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டி எங்கே? - தேடும் பணியில் மீட்புக் குழுக்கள் தீவிரம்
Jan 11 2021 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன், இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொன்ட்டியநாக் நகருக்கு சென்ற ஒரு போயிங் விமானம், கடலில் விழுந்ததில் அதில் பயணித்த 62 பேரும் உயிரிழந்தனர். விமானத்தின் உடைந்த பாகங்கள், பயணிகளின் உடல் ஆகியவை கைப்பற்றப்பட்ட நிலையில், கருப்புப் பெட்டிகளை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கருப்புப் பெட்டிகளில் இருந்து வந்த சிக்னலை வைத்து அவை இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது. Lancang மற்றும் Laki தீவுகளுக்கு இடையே அவை விழுந்து இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 20 ஹெலிகாப்டர்கள், 100 கப்பல்கள் மற்றும் படகுகள், 2 ஆயிரத்து 500 மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.