உலகம் முழுவதும் 9 கோடி பேருக்கு கொரோனா நோய் தொற்று - உலகெங்கும் வேகமெடுக்கும் தடுப்பூசி போடும் பணிகள்
Jan 11 2021 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது.
கொரோனா வைரஸ் பரவலின் வேகம் உலகின் பல நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கி, வேகமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆனால், உலகில் வாழும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்பது அவ்வளவு எளிதில் விரைவில் மேற்கொள்ளப்படும் வாய்ப்புக்கள் இல்லை. இதனால் நோய் தொற்று பரவும் வேகம் பல்வேறு நாடுகளில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 கோடியை தாண்டியுள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது. உலகிலேயே அதிக பாதிப்புக்களை எதிர்கொண்ட நாடான அமெரிக்காவில் மட்டும் 2 கோடியே 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் ஐரோப்பிய நாடுகளில் தான் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.