இந்தோனேசியாவில் கடலில் விழுந்த பயணிகள் விமானம் - கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக தகவல்
Jan 12 2021 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஸ்ரீ விஜயா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் விமானம் கடந்த சனிக்கிழமையன்று ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்டுச் சென்றது. மேற்கு களிமந்தன் தீவின் பொன்டியானக் நகருக்குச் செல்லும் வழியில், புறப்பட்ட 4 நிமிடங்களில் அது வெடித்துச் சிதறி கடலில் விழுந்தது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த பணியாளர்கள் உள்ளிட்ட 62 பேரும் உயிரிழந்தனர். விபத்தைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் உடல்கள் மற்றம் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணிகள் நடந்துவந்தன. இந்நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கபட்டு ஜகார்த்தா நகருக்கு செல்லப்பட்டதாக அந்னாட்டு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.