அமெரிக்க அதிபர் பதவியேற்கும் நாளில் வன்முறைக்குத் திட்டம் - 24-ம் தேதி வரை அவசரநிலை பிரகடனப்படுத்தி உத்தரவு
Jan 12 2021 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் போது கலவரங்கள் மூளும் அபாயம் இருப்பதால் வாஷிங்டனில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலைக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ளார். அப்போது அவருக்கு எதிராக வாஷிங்டன் டி.சி. நகரில், தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடும் அபாயம் இருப்பதாக ஏற்கெனவே புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதே போல் நாடு முழுவதும் மாநிலத் தலைநகரங்களிலும் போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்நிலையில், வாஷிங்டன் நகரில் வரும் 24ம் தேதி வரை அவசரநிலை பிரகடனப்படுத்தும் உத்தரவுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.