ட்ரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்‍க வலியுறுத்தல் - பிரதிநிதிகள் அவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு

Jan 12 2021 7:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை உடனடியாக பதவி நீக்‍குமாறு, துணை அதிபர் மைக்‍ பென்சை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளனர்.

அடுத்த அமெரிக்‍க அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை முறைப்படி அறிவிப்பதற்கான நாடாளுமன்ற கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, தமது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், தோல்வியை ஒருபோதும் நாம் ஒப்புக்‍ககொள்ள முடியாது என்றும், தமது வெற்றிக்‍காக அனைவரும் போராட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றக்‍ கட்டடத்தை முற்றுகையிட்ட ட்ரம்பின் ஆதரவாளர்கள் பின்னர் வன்முறையில் இறங்கினர். இதனால் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்‍கப்பட்டு துப்பாக்‍கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர் ட்ரம்பை பதவி நீக்‍கம் செய்ய துணை அதிபர் மைக்‍ பென்சை ஜனநாயக கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக பிரதிநிதிகள் அவையில் தீர்மானம் நிறைவேற்ற ஜனநாயக கட்சியினர் முடிவெடுத்துள்ளனர். தீர்மானத்தை மைக்‍ பென்ஸ் ஏற்காவிட்டால், ட்ரம்பை பதவி நீக்‍கம் செய்ய நேரடியாக நாளை தீர்மானம் முன்மொழியப்படும் என ஜனநாயக கட்சியினர் அறிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00