லண்டன் நகரில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்புக்கள் - தற்காலிக பிணவறைகளை அமைக்கும் மருத்துவமனைகள்
Jan 12 2021 7:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லண்டன் நகரில் கொரோனா வைரஸ் உயிரிழப்புக்கள் அதிகரிப்பதால், தற்காலிக பிணவறைகளை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் நாடு முழுவதும் ஒரே நாளில் 41 ஆயிரத்து 169 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதே போல் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து வேகமாக அதிகரித்துவருகிறது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்டது போன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அப்போது அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டதால் பிணங்களைக் கையாள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தற்போது லண்டன், கென்ட் உள்ளிட்ட, நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் தற்காலிக பிணவறைகளை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.