யூ டியூப் வலைதளத்தில் ஒருவார காலத்திற்கு பதிவேற்றம் செய்ய ட்ரம்புக்கு தடை - அரசியல் வன்முறை மற்றும் விதிமுறை மீறலால் நடவடிக்கை
Jan 13 2021 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ள டொனால்ட் டிரம்ப்பின் யூ-டியூப் கணக்கு, ஒரு வார காலத்திற்கு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய அதிபராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும், தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்றும் கூறி, டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள், அந்நாட்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்ட நிகழ்வு, உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிரம்ப்பின் தூண்டுதலே இதற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வன்முறைச் செயல்களால் அதிருப்தியடைந்த டிவிட்டர் நிறுவனம், டிரம்ப்பின் கணக்குகளை முடக்கியுள்ளது. இந்நிலையில், யூ-டியூப் நிறுவன விதிகளை மீறும் வகையில் டிரம்ப் செயல்பட்டதாகவும், புதிய வீடியோக்கள் பதிவேற்றத்தை தடுக்கும் வகையிலும், அவரது வீடியோ பதிவேற்ற கணக்குகளை ஒரு வார காலத்திற்கு முடக்கி வைத்துள்ளதாக யூ-டியூப் நிறுவனம், தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.