மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக வலுக்கும் போராட்டம் : போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழப்பு

Feb 21 2021 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் வலுத்தும் வரும் நிலையில், ஆர்ப்பாட்டக்‍கார்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

மியான்மர் நாட்டில், அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த 1-ந் தேதி ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளையும் ராணுவம் கைது செய்தது.

இதனையடுத்து, ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங்சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு ராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌

இந்நிலையில், மண்டலே நகரில் உள்ள கப்பல் தளத்தில் தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, துப்பாக்‍கிச்சூடும் நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00