காற்று மாசுபாட்டைக் குறைக்க இந்தியா முன்வர வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்

Feb 22 2021 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
காற்று மாசுபாட்டைக் குறைக்‍க இந்தியா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என அமெரிக்‍கா வலியுறுத்தியுள்ளது.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் விவகாரத்துக்‍கான அமெரிக்‍க சிறப்பு தூதர் ஜான் கெரி, காற்றில் கலக்‍கும் கரியமில வாயுவின் அளவைக்‍ குறைப்பது மிக அவசியம் எனத் தெரிவித்துள்ளார். 2050-ம் ஆண்டுக்குள் பூஜ்ய மாசுபாடு என்ற அளவை எட்ட வேண்டும் என்றும், அதற்கு, கரியமில வாயுவை காற்றில் அதிகம் கலக்‍கும் இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் நடவடிக்‍கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். உலகிலேயே அதிக அளவில் கரியமில வாயுவை காற்றில் கலந்து வரும் சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் உடனடியாக நடவடிக்‍கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காற்று மாசுபாட்டைக் குறைக்‍க இன்னும் 10 ஆண்டுகளில் நாம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பது மிகவும் முக்‍கியம் என்றும் ஜான் கெரி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00