சிங்கப்பூரில் முகக்‍கவசம் அணியாததால் வழக்‍குப் பதிவு செய்த போலீசார் - பிரிட்டன் நாட்டவருக்‍கு 2 வார சிறை தண்டனை, ரூ. 55 ஆயிரம் அபராதம்

Feb 26 2021 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகளை மீறிய பிரிட்டன் நாட்டவருக்‍கு இரண்டு வார சிறை தண்டனையும், 55 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிக்‍கத் தொடங்கியபின் பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி பிரிட்டனைச் சேர்ந்த 52 வயது நிகல் ஸ்கீயா, தமது வருங்கால மனைவியான அகதா மகேஷ் ஐயாமலையை சட்டவிரோதமாக சந்தித்துப் பேசினார். அப்போது நிகல் ஸ்கீயா முகக்‍கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடியதால் போலீசார் அவர் மீது வழக்‍கு தொடுத்தனர். இந்த வழக்‍கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அவருக்‍கு இருவார கால சிறை தண்டனையும், 55 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. தண்டனையை ஏற்றுக்‍கொள்வதாக கூறிய நிகல் ​ஸ்கீயாவின் வழக்‍கறிஞர், இத்துடன் இப்பிரச்சினைக்‍கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்தார். இதே போல வெளிநாட்டவர் பலர் மீது தொடரப்பட்ட வழக்‍குகளில், பணியாற்றுவதற்கான உரிமை பறிப்பு உள்ளிட்ட தண்டனைகளை நீதிமன்றங்கள் விதித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00